மின்னலே நீ வந்ததேனடி (பாகம் 1)

அக்ரீமெண்ட் என்ற பெயரில் திருமணம் செய்து நாயகியை பழிவாங்கும் நாயகன்.. ஏன் என்று தெரியாமல் நாயகனின் சித்திரவதையில் சிக்கி தவிக்கும் நாயகி.. ஒரு கட்டத்திற்கு மேல் பொறுக்க முடியாமல் தன் உறவுகளை தேடிச் சென்றவளுக்கு அங்கேயும் தனக்கு துரோகம் இழைக்கப்பட்டது தெரிய வர.. தன்னை இந்நிலைக்கு ஆளாக்கியவர்களுக்கு எவ்வாறு பதிலடி கொடுத்தாள் என்பதே கதை..


இது ஒரு ஆன்ட்டி ஹீரோ ஸ்டோரி..

கண்களில் கண்ணீருடன், அந்த ஒப்பந்த பத்திரத்தை கைகள் நடுங்க எடுத்தாள் அந்த பேதை ...தன் முன்னே திமிரே உருவாய், நெஞ்சில் கடுகளவு கூட இரக்கம் இல்லாமல், கண்களில் வெறியுடன் உதட்டில் ஏளனப் புன்னகை தவழ தன்னை பார்க்கும் நபரை, கண்டு பயத்தில் எட்சில் விழுங்கி கொண்டு.. சா.. சார் ...இதை கட்டாயம் நான் பண்ணிதா ஆகணுமா..இத தவற வேற வழி இல்லையா .கண்களில் ஏக்கம் மின்ன என்னை விட்டுவிடேன் என கேட்க ... அதற்கு எதிரில் இருந்தவனோ கால்களை டேபிள் மீது போட்டு கொண்டு ...அய்யோ ...பேபி மா..டோன்ட் க்ரை ...உனக்கு இத விட்டா வேற வழி இல்ல ...ஆனா உன்ன நான் போர்ஸ் பண்ண மாட்டேன், கதவு தொறந்துதான் இருக்கு நீ தாராளமா வெளிய போலாம், என சொல்லிக்கொண்டே எகத்தாளமாக சிரித்தான் விஜய வேந்தன் ...

Post a Comment

0 Comments